blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, July 15, 2014

கிறிஸ்தவத் திருச்சபையில் பெண்களை ஆயர்களாக நியமிக்க அனுமதி


கிறிஸ்தவத் திருச்சபையில் பெண்களை ஆயர்களாக நியமிக்க அனுமதிஇங்கிலாந்து கிறிஸ்தவத் திருச்சபையின் நிர்வாகப் பொதுக்குழுவான தி ஜெனரல் சினோட், (The General Synod) இத்திருச்சபையில் பெண்கள் ஆயர்களாக நியமிக்கப்படுவதற்கு அனுமதியளித்து வாக்களித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் பெண்கள் ஆயர்களாக நியமிக்கப்படுவதற்கு ஆதரவாக கிடைத்துள்ளன.

அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த வருட இறுதிக்குள் அங்கிலிக்கன் திருச்சபையில் பெண் ஆயர்கள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட இதே யோசனையை திருச்சபையின் பழமைவாதிகள் நிராகரித்திருந்தனர்.

ஆனால் இம்முறை, ஆண் ஆயர்களை மாற்றாகக் கோரும் உரிமை உட்பட, சில விட்டுக்கொடுப்புகள் அவர்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

அங்கிலிக்கன் மதகுருமார்களில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கும் பெண் பாதிரியார்கள் திருச்சபைக்குள் தங்களுக்கு சம உரிமை வழங்கப்படுவது, திருச்சபையில் தங்களது அந்தஸ்தை பெருமளவு உயர்த்தும் என குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►