அரசாங்க அதிகாரிகள் எந்த அழுத்தங்களுமின்றி
சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் சுதந்திரம்
வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போதைவஸ்து, எதனோல், வல்லப்பட்டை
போன்றவற்றை கைப்பற்றும் போது சிலர் அரசாங்கத்தின் மீது விரல் நீட்டுவதாகத்
தெரிவித்த ஜனாதிபதி, அரசியல்வாதிகளினதோ அல்லது வேறு எவரதும்
அழுத்தங்களுக்கு அரச ஊழியர் கள் அடிபணியாத நிலைமையை உருவாக்கியுள்ளதாக
அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
சுங்கத்திணைக்களத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
Leave A Reply