தோப்பூர் -நாவற்கேணிக்காடு முஸ்லிம் மக்களை எதிர் வரும் 8ஆம் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் தமது குடும்பத்தினரோடு வெளியேறுமாறு சேருவில பிரதேச செயலாளரினால் அக் கிராமத்தில் வசிக்கும் பலருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று சேருவில பிரதேச செயலாளர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரம்ழான் அன்வர் மற்றும் பொது மக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்ற இடத்தில் இடம் பெற்றது.
இதன் கருத்து தெரிவித்த சேருவில பிரதேச செயலாளர் வீடுகள் உள்ள காணிகளில் வசிப்பவர்கள் தொடர்ந்து இருக்கலாம். வயல் காணிகள் வெறுமனே சும்மா இருக்கின்ற காணிகள் போன்றவற்றின் உரிமையாளர்களுக்கே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதே வேளை இது எனது தனிப்பட்ட முடிவல்ல. மேல் மட்டத்திலிருந்து வந்த கட்டளைக்கமையவே எனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன் என்றார்.
இந்த நேரத்தில் இந்த கருத்தை இடை மறித்து பேசிய கிராமவாசி ஒருவர் இது எங்களது மூதாதையர்கள் வாழ்ந்து வந்த காணி எங்களுக்கு 1960ம் ஆண்டுக்கு முன்னரான காணி அத்தாட்சி பத்திரம் இருக்கின்றது.
இவ்வாறு உண்மை நிலமை இருக்கும் போது எங்களது காணிகளை எந்த வேளையிலும் விட்டுக்கொடுக்க முன்வரப் போவதில்லை என்றார்.இந்த வேளையில் அங்கிருந்த பெரும்பாண்மை இனத்தவர்களுக்கும் முஸ்லிம் இளைஞர்கள் சிலருக்கு வாய்தர்க்கம் ஏற்படவிருந்த வேளை கிழக்கு மாகாணசாபை உறுப்பினர் ரம்ழான் அன்வர் தலையிட்டு பிரச்சினையை சுமுக நிலைக்கு கொண்டு வந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரம்ழான் அன்வர்-இந்த காணிப் பிரச்சினையை நாம் சுமுகமாக தீர்க்கவே சிந்திக்க வேண்டும். நாட்டில் இடம் பெற்று வருகின்ற அசம்பாவிதங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எங்களது முஸ்லிம் மக்கள் தோப்பூர்-நாவற்கேணிக்காடு பிரதேசத்தில் இன்று நேற்று குடியேறியவர்கள் அல்லர பல தசாப்தங்களுக்கு முன்னரே குடியேறி தமது இருப்பிடங்களை அமைத்து வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.
அவர்களுக்கு காணி ஆதாரங்கள் இருக்கின்றன.வீட்டுக்கான மின்சார கட்டண துண்டு இருக்கின்றது.
வயல் செய்தமைக்கான போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.இவைகள் எங்களது ஆதாரங்களாக இருக்கும் போது பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முன்வருவேன் அல்லது நீதி மன்றம் சென்றேனும் தோப்பூர் -நாவற்கேணிக்காடு மக்களுக்கு காணியை பெற்றுக் கொடுக்க போராடுவேன் என்றார்.
இந்த கூட்த்தில் தோப்பூர் ஜம்யதுல் உலமா சபை தலைவர் மூமீன் ஜரீத் சேருவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.பைசர் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.நிஸ்மி போன்றோரும் கலந்து கொண்டனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, July 15, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மெக்கோ கிளிகளை காணவில்லை கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக க...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply