blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, July 3, 2014

கச்சதீவு இலங்கைக்கே உரியதா? மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தமிழக முதலமைச்சர் பேரதிர்ச்சி!

கச்சதீவு இலங்கைக்கே உரியதா? மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து  தமிழக முதலமைச்சர் பேரதிர்ச்சி! திகைப்பு!!கச்சதீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசம் என்றும், அந்தத் தீவைச் சூழ்ந்த பகுதிகளில் இந்திய மீனவர்களுக்கு பாரம்பரியமான மீன்பிடி உரிமை இல்லை என்றும் இந்திய மத்திய அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் கூறப்பட்டிருக்கின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அதிர்ச்சியும், திகைப்பும் வெளியிட்டிருக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்லவாரம் மீனவர் நலனோம்பு அமைப்பு தொடர்ந்த வழக்கு ஒன்று தொடர்பில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு தமக்குப் பேரதிர்ச்சியைத் தந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 1974 மற்றும் 1976 இல் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தங்களின் படி இந்திய மீனவருக்கு கச்சதீவில் எந்த உரிமையும் கிடையாது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவும் சத்தியக் கடதாசியும் முன்னைய ஐக்கிய மக்கள் முன்னணி அரசினால் தயாரிக்கப்பட்டவை என்றும், அது பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட வியடம் அல்லவென்றும் ஜெயலலிதா தனது பிந்திய கடடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடைய முன்னைய பல கடிதங்களில் இவ்விடயத்தைத் தாம் சுட்டிக்காட்டியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர், கச்சதீவு, இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதி என்பதே தமிழக அரசின் மாறாத நிலைப்பாடு என்றும் இந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மக்கள் வாழாத கச்சதீவு தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் பகுதியாக இருந்து வந்துள்ளது என்பதற்கு ஆவண ரீதியான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசமைப்பு ஏற்பாடுகளுக்கு முரணாக கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அப்பாவித் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை மோசமாகத் தாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் காலம் தாமதிக்காமல் மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►