
நியூஜேர்ஸியிலுள்ள மஹ்வாஹ் நகரிலுள்ள பாடசாலை மாணவர்களே இச்சாதனையை கடந்த வாரம் ஏற்படுத்தியுள்ளனர்.
மஹ்வாஹ் பொலிஸ் திணைக்களத்தினால் 8ஆவது ஆண்டாக நடாத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்விலேயே இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதில் 74.5 அடி நீளமான தூரத்தை 250 மாணவர்கள் படுத்தவாறு சறுக்கிச் சென்றுள்ளனர். இந்நிகழ்வில் 8 முதல் 12ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இதில் பங்கெடுத்துள்ளனர்.
ஏற்கனவே 2011ஆம் ஆண்டில் இப்பொலிஸ் திணைக்களம் ஏற்பாடு செய்த தலைமைத்துவ பயிற்சி நிகழ்வில் அதிகளவான ஒன்றாக சிரித்த முகத்துடன் காட்சியளித்து கின்னஸ் சாதனை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply