மாகாணசபை முறைமையை ஒழித்து அந்த
அதிகாரங்களையும் தங்கள் கைக்குள் எடுத்துக்கொள்ள நினைக்கும் அரசுடன்
ஒட்டிக்கொண்டு முஸ்லிம்கள் அரசியல் செய்வது முறையற்றது என்று நேரடியாகக்
குற்றஞ்சாட்டினார் தமிழ்த்
தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
தங்கள் நிலைமை உணர்ந்து
அவர்கள் வெகுவிரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கரம் சேர்ப்பர்
என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்
நாயகம் ஹசன் அலி முன்பாகவே இந்தக் கேள்வியை அவர் எழுப்பினார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்
34 ஆவது சிறப்பு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு வீரசிங்கம் மண் டபத்தில்
நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு சிறப் புரையாற்றுகையிலேயே
சம்பந்தன் இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து
உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001 ஆம்
ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரையில் நாங்கள் ஐக்கியமாகச்
செயற்பட்டு வருகின்றோம். இனியும் ஐக்கிய மாகச் செயற்படுவோம். மக்கள் எங்கள்
மீது நம்பிக்கை வைத்துஇ கிடைக்கின்ற ஐனநாயகச் சந்தர்ப்பங்களில் எல்லாம்
எங்களுக்கு வாக்களித்திருக்கின்றார்கள்.
அந்த மக்களின் நம்பிக்கைக்கு
பாத்திரமாக நடக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல்வேறு
கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கட்சிகளுக் கிடையே கருத்து வேறுபாடுகள்
இருக்கலாம். ஆனால் அவற்றை நாம் பேசித்தீர்த்து ஒற்றுமைப் பாதையில்
செயற்பட்டு வந்திருக்கின்றோம். நாம் அந்தப் பாதையிலிருந்து தவறமாட்டோம்.
இலங்கை அரசைஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசு மாறுஇ சர்வதேச சமூகம்
வலியு றுத்தி வருகின்றது. இதற்குக் காரணம்இ எமது மக்கள் எங்க ளுக்கு தந்த
அங்கீகாரமே.
இந்த நாட்டில் நாங்கள் எவ ரையும்
எதிர்க்கவில்லை. பெரும் பான்மையினத்தவர்கள் எங்கள் நண்பர்கள். இன்று ஆட்சி
யிலிருப்பவர்கள்இ பெரும் பான் மையின மக்கள் மத்தியில் துவேசத்தை
கிளப்புகின்றார்கள்.
அந்தச் சதி வலைக்கள் நாம் சிக்கிவிடக்
கூடாது. பெரும்பான்மை சிங்களவருடன் இணைந்து நாங்கள் எங்கள் பிரச்சினையைத்
தீர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் நாட்டைப் பிரிக்கும் படியாக
கேட்கவில்லை.
பூர் வீகமாக வாழ்ந்து வந்த பிரதேசத்தின் அடிப்படையில்
இறைமையின் அடிப்படையில்இ அதிகாரத்தைப் பகிரும் படி கேட்கின்றோம். எமது
மக்களுக்கு அவர்களின் இறைமையின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும்.
இதுதான் எமது நிலைப்பாடு.
நாங்கள் நிதானமாக பக்குவமாக செயற்பட
வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். எங்கள் மக்களுக்கு உரியனவற்றைக்
கேட்கின்றோம்.
எங்களின் அர்ப்பணிப்புக் காரணமாகஇ எங்கள் இளைஞர்களின்
தியாகம் காரணமாக 1987 ஆம் ஆண்டில் இந்த மாகாணசபை கிடைத்தது. இந்திய இலங்கை
ஒப்பந்தத்தில்இ தமிழ் பேசும் மக்கள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைத்த மாகாணசபை முறைமையை இல்லா
தொழிக்க வேண்டும் என்று செயற்படு பவர்களுடன் சேர்ந்து முஸ்லிம் கள் ஆட்சி
நடத்துவது சரியா? முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முஸ்லிம் தலைமை
செயற்பட்டு வருகின்றது.
இதை அவர்கள் உணரும் காலம் வந்துவிட்டது.
எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம்களும் கைகோர்த்துச்
செயற்படுவார்கள் என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply