ஹொலிவுட் படமான
ஹொரி போட்டர் 3ம் பாகத்தில் ஓநாய் மனிதனாக நடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த
டேவிட் லெஜினோ.இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது.
இவர் கலிபோர்னியா மாகாணத்தின் டெத் வேலி குதியில் உள்ள பாலைவனத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து பொலிஸார் ஹெலிகாப்டரில் சென்று அவரது பிணத்தை மீட்டு வந்தனர்.
மேலும் இவரது மரணம் குறித்து பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டேவிட் லெஜினோ நடிகராவதற்கு முன்பு தொழில் ரீதியாக குத்து சண்டை வீரர் ஆக இருந்தார். தற்போது இவர் ஸ்வர்டு ஆப் வெஞ்சன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அது விரைவில் வெளிவரவுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply