blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, July 25, 2014

இரண்டு இலட்சம் தொன் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்!!

இந்த ஆண்டில் இலங்கையின் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கென தெற்கு கிழக்கு வட மத்திய வடக்கு ஆகிய மாகாணங்களில் நான்கு ஏற்றுமதி வலயங்கள் ஏற்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் மூலம் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இத்தகவலை தெரிவித்தார்.

தென் மாகாணத்தில் சூரியவௌயிலும், கிழக்கு மாகாணத்தில் நிந்தவூர் அட்டாளைச்சேனை, சம்மந்துறை ,பொத்துவில், கல்முனை ஆகிய பகுதிகளிலும் அரிசி ஆலைகள் அமைக்கப்படும்.

அவ்வாறே வட மத்திய மாகாணத்தில் தலாவை, மதவாச்சி, ரம்பேவை தம்புத்தேகமை ஆகிய பகுதிகளிலும் வட மாகாணத்தில் மன்னாரிலும் அரிசி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►