சொந்தமண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்ததால் வீரர்களும் அந்நாட்டு ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இருபதாவது உலகக்கிண்ணப் போட்டிகள் பிரேஸிலில் நடக்கின்றன. இதில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்குத் தொடங்கிய மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் பிரேஸில் - நெதர்லாந்து அணிகள் மோதின.

இரு அணிகளும் இறுதியாட்டத்துக்கு செல்ல முடியாது போனதால் தங்கள் ரசிகர்களை ஆறுதல்படுத்துவதற்காக மூன்றாம் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினர். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
எனினும் ஆரம்பம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடிய போதிலும் முதல் பாதியில் நெதர்லாந்து அணி 2 க்கு 0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் கோல்களை போடுவதற்காக பிரேஸில் அணி வீரர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள் நெதர்லாந்து வீரர்களால் இலகுவாக முறியடிக்கப்பட்டன.
கடந்த இரணடு போட்டிகளில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதை அடுத்து அரையிறுதிப் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட பிரேஸில் அணித் தலைவர் தியாகோ சில்வா நேற்றைய போட்டியில் பங்கேற்றார்.

எனினும் இந்த போட்டியிலும் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இறுதியில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் நெதர்லாந்து அணி மேலும் ஒரு கோலை 3ஆவது இடத்தை கைப்பற்றியது.
நெதர்லாந்து அணியில் பெர்ஸி, பிளைண்ட், வினால்டம் ஆகியோரே நெதர்லாந்தி அணி சார்பில் தலா ஒரு கோலை போட்டமை குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் நெதர்லாந்து அணி மூன்றாம் இடத்தை பிடித்த முதல் சந்தப்பம் இதுவென்பதும் குறிப்பிடதக்கது.
அத்துடன் 1940 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரேஸில் அணி தனது சொந்த மண்ணில் இரண்டு போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த முதல் சந்தரப்பம் இதுவாகும்.

No comments:
Post a Comment
Leave A Reply