blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

80171

Thursday, July 17, 2014

ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் வரியை செலுத்தாதது ஏன்? நீதிபதி கேள்வி!


jayalalitha buy president car
ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வரியை செலுத்தாதது ஏன் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.


ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் புதன்கிழமை 20வது நாளாக வாதங்களை முன்வைத்தார். 1992ம் ஆண்டில் குடியரசு தலைவரிடம் இருந்து வாங்கப்பட்ட காருக்கு 1993-94ம் ஆண்டில் வருமான வரி செலுத்தப்பட்டதாக ஜெயலலதா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா, 1992ம் ஆண்டு செப்டம்பரில் வாங்கிய காருக்கு 1992-93ம் ஆண்டு வருமான வரி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக செலுத்தப்பட்டது ஏன்.!!~

ஜெயலலிதா வங்கிக் கணக்கில் அவ்வப்போது 50 லட்சம் ரூபாய், ஒரு கோடி ரூபாய் என்று டெபாசிட் செய்துள்ளாரே. இந்த பணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா தரப்பு வாதம் இன்றும் (வியாழன்) தொடர்ந்து நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►