கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை உண்டு என்று மீனவர்கள் பாதுகாப்பு பேரவையின் தலைவர் பீட்டர் ராயப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது அப்போதையை, காங்கிரஸ் தலைமையினான மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
அதில், 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமையில்லை என்றும், 1976 ஆம் ஆண்டிலேயே கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கச்சத்தீவு தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்களை மத்திய அரசு கொடுத்துள்ளது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில், "1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் குறித்து அரசு உண்மைக்கு மாறான தகவல்களை மத்திய அரசு கொடுத்துள்ளது.
ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு மீனவர்களுக்கும் அப்பகுதியில் மீன்பிடிக்க, அங்கு வழிபாடு நடத்த உரிமை உண்டு. இருநாட்டு அரசுகளும் இதனை உறுதி செய்தது" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஒப்பந்தம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங் உறுதி செய்தார் என்றும் மனுதாரர் தரப்பில் தெளிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் மீண்டும் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு நியாயப்படுத்தக் கூடாது என்றும், கச்சத்தீவில் வலைகளை உலர்த்த, கச்சத்தீவில் மீனவர்கள் ஓய்வெடுக்க உரிமை உள்ளது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, July 3, 2014
கச்சத்தீவில் மீன்பிடிப்பதற்கு இந்தியர்களுக்கு உரிமையில்லை: மத்திய அரசு பதில் மனு!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
-
மன்னார், மருதனார்மடு பகுதியில் மிருகவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply