மொரடுல்ல
பகுதியில் தங்க நகை அடகு நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட
ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட
சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளை வெலிகம மற்றும் திக்வெல்ல பகுதிகளில் அடகு வைப்பதற்கு முயற்சித்தபோது, அவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மொரடுல்ல பகுதியில் மே மாதம் 25 ஆம் திகதி தங்க நகை அடகு நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு சுமார் 11 கிலோகிராம் நகைகள் கொள்ளையடிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply