
இரத்தோட்டை பொலிஸார் முன்னெடுத்த விரிவான விசாரணைகளின் பின்னர், சாட்சியங்களுக்கு அமைய, குறித்த அதிபரே மாணவனை மாம்பழம் பறிப்பதற்கு அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, பாடசாலையின் அதிபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது.
மாம்பழம் பறிப்பதற்காக மாமரத்தில் ஏறிய பாடசாலை மாணவன் மரத்திலிருந்து தவறி வீழ்ந்தமையால், கடந்த 27 ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பாடசாலை அதிபர், இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply