இன்று முதல் 11 நாட்களுக்கு இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டிகளுக்காக 71 நாடுகளிலிருந்து 4,500ற்கும் அதிகமான வீர, வீராங்கணைகள் ஸ்கொட்லாந்தை சென்றடைந்துள்ளனர்.
இன்று நடைபெறும் ஆரம்ப நிகழ்வினைத் தொடர்ந்து நாளை ஆரம்பமாகவுள்ள போட்டிகளில் மொத்தமாக 17 விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்மை குறிப்பிடத்தக்கது.
இம்முறை மொத்தமாக 261 தங்கப் பதக்கங்களுக்காக போட்டிகள் நடைபெறவுள்ளன.
இன்று நடைபெறும் ஆரம்ப நிகழ்வில் இலங்கை குழாமிற்கு மல்யுத்த வீரர் அன்டன் சுதேஷ் பீரிஸ் தலைமைத் தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளார்.
இலங்கை சார்பாக இம்முறை 13 வகையான விளையாட்டுகளில் 99 வீர வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதோடு, மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில் ஐவர் பங்கேற்கின்றனர்.
இதேவேளை, இலங்கை வீரரகள் மூவருக்கு இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் சந்தர்ப்பம் கைநழுவிப் போயுள்ளது.
விசா அனுமதி கிடைக்காமையால் உயரம் பாய்தல் போட்டியின் சாம்பியனான மஞ்சுள குமார இம்முறை பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்கவில்லை என இலங்கை அணியின் பிரதம அதிகாரி நிஷாந்த பியசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குத்துச் சண்டை வீராங்கனை அனுஷா கொடிதுவுக்கு மற்றும் ரக்பி வீரர் யோஷித்த ராஜபக்ஸ ஆகியோர் உபாதை காரணமாக போட்டிகளில் பங்குபற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply