தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்பரப்புக்களில் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் 09 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
4 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதுடன், ஏனையவர்கள் காங்கேசன்துறையில் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கூறினார்.
இந்தக் குழுவினர் தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு அழைத்துவரப்பட்டதன் பின்னர், அந்தப் பகுதிகளின் கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட 39 இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 23 மீனவர்களும், 4 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கர்நாடக மாநிலத்தில் 16 மீனவர்களும் படகொன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட
குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 39 இலங்கை மீனவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply