blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, July 18, 2014

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: நடிகைக்கு 18 ஆண்டுகள் சிறை

newsஅமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகை ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புதுபாஸ்டன் நகரில் வசித்து வந்த நடிகை ஷனான் கெஸ் ரிச்சர்ட்ஸன் (36) தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் நியூயோர்க்கில் மேயராக இருந்த மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு ரிசின் என்றழைக்கப்படும் கொடிய விஷத்தை தடவி கடந்த ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையில் ரிசின் விஷத்தை தான் வைத்திருந்ததை நடிகை ஷனான் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் விஷம் தடவிய கடிதங்களை தனது முன்னாள் கணவர்தான் அனுப்பினார் என்று அவர் வாதிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் கூறியது பொய் என தெரியவந்ததையடுத்து நடிகை ஷனானுக்கு 3 லட்சத்து 67 ஆயிரம் டொலர் (சுமார் ரூ.20 கோடி) அபராதமும் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டெக்காஸ் கிழக்கு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►