
ஐ.நா அமைத்துள்ள இந்த குழுவில், பின்லாந்து முன்னாள் அதிபர் மார்ட்டி அதிஸ்சாரி, நியூசிலாந்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைய முன்னாள் தலைவர் அஸ்மா ஜகாங்கீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இறுதிகட்டப் போரின்போது, இராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது தொடர்பான புகார் மீது இக்குழு விசாரணை நடத்தும்.
அதோடு, இலங்கையில் விசாரணை நடத்தத் தேவையான பல்வேறு நிபுணர்களையும் சேர்த்துக்கொண்டு இக்குழு ஏப்ரல் 2015 வரை 10 மாதங்களுக்கு செயல்படும்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை, இந்த குழுவின் விசாரணைக்கு இலங்கை அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஐக்கிய நாடுகளின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply