பிள்ளைகளுக்கு பதிலாக நாய்களையும்
பூனைகளையும் வளர்க்கும் ஜோடிகள் தமது முதுமை வயதில் கசப்புமிக்க கடும்
தனிமையில் வாழ நேரிடும் என பாப்பரசர் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.
வத்திகானில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
பிள்ளைகளை வளர்ப்பதை விட செல்லப்பிராணிகளை வளர்ப்பது செளகரியமாக
இருக்கலாம். ஆனால் அது அன்பு மற்றும் தெய்வீகம் தொடர்பில் ஒரேமாதிரியான
வாய்ப்பை வழங்காது என பாப்பரசர் கூறினார்.
திருமணமாகி 25முதல் 60 ஆண்டுகள் இணைந்து வாழும் 15 ஜோடிகளுக்காக வழங்கிய விசேட ஆராதனையின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது குழந்தையொன்றைப் பெற்றுக்கொள்வதில்லை என்ற தீர்மானத்திலிருக்கும் ஜோடிகளுக்கு எதிராக அவர் கண்டனத்தைத் தெரிவித்தார்.
ஒரு நாய் மற்றும் இரு பூனைகளுக்கு அன்பு செலுத்தி வாழ்வது மிகவும்
செளகரியமானதாக இருக்கலாம். ஆனால் இறுதியில் வயோதிப காலத்தில் கசப்பான
தனிமையை எதிர்கொள்ள நேரிடும் என அவர் கூறினார்.
இத்தாலியில் கடந்த 5வருட
காலத்தில் இல்லாதவாறு கடந்த வருடம் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பாப்பரசரின் இந்த உரை இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம் அந்நாட்டில் 515 000 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply