blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 20, 2014

கல்முனையில் கண்டனப் பேரணி

அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதலைக் கண்டித்து பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்திருந்த கண்டனம் தெரிவிக்கும் பேரணி இன்று வெள்ளிக்கிழமை கல்முகைக்குடி முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.
அமைதியான முறையில் இடம்பெற்ற இக்கண்டன பேரணியில் 'முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நியாயம் வழங்க வேண்டும்', 'பொதுபலசேனாவை தடை செய்ய வேண்டும்', 'இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும்' என்ற சுலோகங்கள் அடங்கியிருந்த பதாகைககைளைக் கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

பெருந்திரளான இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட இப்பேரணியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பறகதுல்லா பங்கு கொண்டார்.


No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►