கொழும்பிலிருந்து
அக்கரைப்பற்றுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு
சிகரெட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை வாழைச்சேனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது, ஓட்டமாவடி பாலத்திக்கு அருகில் சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களின் மொத்த பெறுமதி 44 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஓட்டமாவடி மற்றும் சம்மாந்துறை பகுதிகளை சேர்ந்தவர்ளே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply