
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இலங்கையில் அதிகளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
போதைப்பொருளுடன் ஹைபிரிட் காரொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply