எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, June 25, 2014
பிரான்ஸ் பிரஜையால் 40 இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம்; 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
பிரான்ஸ் பிரஜை ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 40 சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 11 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசாரணை பிரிவு குறிப்பிடுகின்றது.
அவர்களில் ஐவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், ஏனைய 6 பேரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அதிகார சபை தெரிவிக்கின்றது.
குறித்த சிறுவர்களை பிரான்ஸ் பிரஜைக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 2ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காலி பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 32 வயதான இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பிரான்ஸ் பிரஜைக்கு, துஷ்பிரயோகத்திற்காக பல சிறுவர்களை விநியோகித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிடுகின்றது.
இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களின் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு வழங்கியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 52 வயதான சந்தேகநபர் 2006 முதல் 2012ஆம் ஆண்டு வரை பல தடவைகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.
அவர் வேறு நாடுகளிலும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபர் தற்போது பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பிரான்ஸ் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாகவே, இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிடுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
மைத்திரியை வெற்றி பெற வைப்பதற்காக ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வாகனத்தில் ‘மைத்திரி தினவண்ட ஜயவேவா’ என வண்டிகளை காட்சிப்படுத்...
-
சுப்பிரமணியன் சாமியின் வாய் சும்மாவே இருக்காது போல. யாரையாவது கிண்டலடித்தபடியே இருக்கிறார்.
No comments:
Post a Comment
Leave A Reply