இந்தியாவின், உத்தரப் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் இளம் பெண் ஒருவரை பொலிஸாரே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 9ஆம் இரவு ஹமிர்பூர் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது கணவரை பார்வையிடச் சென்ற பெண்ணே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பெண்ணிடம், பொலிஸார் 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள குடியிருப்பிற்கு பெண்ணை அழைத்துச் சென்ற மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் துஷ்பிரயோகப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டை அடுத்து ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏனையோரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே அங்கு மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply