இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.அரசுக்கு சொந்தமான பஸ் மற்றும் தனியார் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு வாகனங்களும் மிக வேகமாக மோதியதில், வேன் பள்ளத்தில் வீழந்துள்ளது.
வேனின் சாரதி உள்ளிட்ட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியில் பலியாகினர்.
விபத்தில் பலியான 15 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவர், இதில் 3 குழந்தைகளும் 5 பெண்களும் அடங்குவர்.
காயமடைந்த நிலையில் பஸ்ஸின் சாரதி, நடத்துநர் உள்ளிட்ட 8 பேரும் வேனில் இருந்த 6 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply