சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் அணிக்களுக்கான புதிய தரப்படுத்தலில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதுவரை முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்க அணி 2 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு இடம் முன்னேறி, முறையே 3 ஆம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுள்ளன.
இந்தியா 5 ஆம் இடத்திற்கும் இலங்கை ஏழாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன்> நியூசிலாந்து 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதேவேளை சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரப்படுதலில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது.
இந்தியா,
இலங்கை, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து,
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் அடுத்த அடுத்த இடங்களைப்
பெற்றுள்ளன.
அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்றுவிப்பாளர் டெரன் லீமன்
மீண்டும் மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளதாக அந்த அணி வீரர் கிறிஸ் ரொகர்
தெரிவித்துள்ளார்.
யோர்க்ஷேயார் அணிக்கெதிரான போட்டியின் போதே மிடில்செக்ஸ் அணியின் தலைவரான கிறிஸ் ரொகர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தப்
போட்டியில் கிறிஸ் ரொகர் ஆட்டமிழக்காமல் பெற்ற 241 ஓட்டங்களின் உதவியுடன்
மிடில்செக்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றிருந்தது.
No comments:
Post a Comment
Leave A Reply