சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான போலி இந்திய நாணயத்தாள்கள் வைத்திருந்த
எட்டு பேரை திருகோணமலை மாவட்டத்திலுள்ள லிங்கநகர் பகுதியில் வைத்து
கிண்ணியா பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவர்கள் மேலதிக விசாரணைக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டள்ளனர்.
ஒரே இலக்கத்தை கொண்ட சுமார் 30 இலட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களை இவர்கள் பரிமாற்ற முனைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply