தனியார் பஸ் ஊழியர்கள் நால்வர் இன்று சீதுவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்சின் ஊழியர்களுக்கும், நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்சின் ஊழியர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
பயணிகளை பஸ்சில் ஏற்றுவது தொடர்பில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள இரண்டு பஸ்களினதும் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply