blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, May 18, 2014

முள்ளிவாய்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இறுதி யுத்தத்தின்போது முள்ளி வாய்க்காலில் உயிரிழந்தவர்களின் 5ஆவது ஆண்டை நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விளக்குகள் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நினைவுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், இரா துரைரத்தினம், மா.நடராசா, வெள்ளிமலை, இந்திரக்குமார் பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►