ஜப்பானில் பொம்மை என குறிக்கப்பட்டு வந்த தபால் பொதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின்
ஒசாகா சிட்டியைச் சேர்ந்தவர் ரிக்கா ஒகாடா. இவர் கடந்த மார்ச் மாதம்
திடீரென மாயமானார். ஆனால், மாயமாவதற்கு முன்னதாகத் தனது பால்ய சினேகிதி
ஒருவரைச் சந்திக்க இருப்பதாக பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார் ரிக்கா.
ஆனால்,
அதன் பின்னர் அவர் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை. இந்நிலையில், நேற்று
சந்தேகத்திற்கிடமான வகையில் சுமார் 6 அடி 6 அங்குலத்தில் பொதி ஒன்றை
பொலிஸார் கைப்பற்றினர்.
அதன் மேலே பொம்மை என
எழுதப்பட்டிருந்தது. அப்பொதி ஒசாகாவின் தென்பகுதியில் இருந்து
அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அனுப்பியவர்கள் குறித்த விபரமில்லை. அந்தப்
பொதி ரிக்காவின் பெயரில், அவரது முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது.
அதன்
கட்டணத்தையும் ரிக்காவின் கடன் அட்டையிலிருந்தே எடுத்துள்ளனர். சுமார் 400
கிலோ மீட்டர் தொலைவைப் பயணம் செய்து வந்த அந்தப் பொதி மீது பொலிஸாருக்கு
சந்தேகம் வந்ததால், பொலிஸார் அதைப் பிரித்துப் பார்த்தனர்.
அதன்
உள்ளே ரிக்காவின் சடலம் இருந்தது. ரிக்காவின் உடலில் எண்ணிலடங்கா
கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரிக்காவைக் கொலை செய்தது அவரது பள்ளித் தோழி தான் என்றும்,
கொலையாளி ரிக்காவின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இம்மாத துவக்கத்தில்
வெளிநாடு சென்றுவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது தொடர்பான தெளிவான விபரங்களை வெளியிட ஒசாகா பொலிஸார் மறுத்துள்ளனர். தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment
Leave A Reply