blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, May 27, 2014

மோடிக்கு எதிராக ‘வட்ஸ் அப்’ குறுஞ்செய்தி; மாணவர் கைது

மோடிக்கு எதிராக ‘வட்ஸ் அப்’ குறுஞ்செய்தி; மாணவர் கைதுஇந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாக குறுஞ்செய்தி அனுப்பிய கர்நாடக மாணவரை சைபர் கிரைம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சையித் வக்காஸ் பர்மாவர் என்ற கல்லூரி இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவருடைய தந்தை ஷமிமுல்லா பர்மாவர் கர்நாடகாவில் பரவலாக அறியப்பெற்ற உருது கவிஞர். மக்களவைத் தேர்தலின் போது வக்காஸ் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக செயல்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே 16ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது வக்காஸ் தனது நண்பர்களுக்கு ‘வட்ஸ் அப்’இல் (Whatsapp) குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

பா.ஜ.கவின் பிரசார ஸ்லோகமான “இதுதான் சிறந்த தருணம், மோடியை தேர்ந்தெடுங்கள்” என்பதை, “இது தான் சிறந்த தருணம், மோடிக்கு இறுதி அஞ்சலி செலுத்துங்கள்” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இந்த குறுஞ்செய்தி பா.ஜ.க தொண்டர் ஒருவருக்கும் கிடைத்துள்ளது.
குறித்த தொ்ணடர் வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►