மலேஷியப்
பயணிகள் விமானம் காணாமல் போனமை தொடர்பில் தவறான அணுகுமுறையை பின்பற்றியதை
மலேஷியப் பிரதமர் நஜிப் ரசாக் ஏற்றுக்கொண்டுள்ளார்.பயணிக்கும் போதே விமானங்களின் நகர்வுகள் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் மலேஷியப் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாத்தியமற்ற சூழ்நிலைகளில் சிறந்த முறையில் தமது நாடு தேடுதல் பணிகளை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் விமானம் காணாமல் போன பின்னர் அதனை தேடும் மற்றும் மீட்கும் பணிகளை விமான கட்டுப்பாட்டாளர்கள் நான்கு மணித்தியாலங்களின் பின்னரே ஆரம்பித்ததாக நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் காணாமல் போனவுடன் அதனை கண்டறிவது தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் தகவல் தொலைத் தொடர்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply