blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, May 20, 2014

புலிகள் இயக்கத்தின் பாடல்கள், படங்களை வைத்திருந்தவரிடம் தடுப்பு காவல் விசாரணை


புலிகள் இயக்கத்தின் பாடல்கள், படங்களை வைத்திருந்தவரிடம் தடுப்பு காவல் விசாரணைமட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் கைதான சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது கையடக்க தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பாடல்களையும், படங்களையும் வைத்திருந்ததை அடுத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சந்தேகநபர் கடந்த 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பின்னர் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அஜித் ரோஹண கூறினார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►