
பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக தம்புள்ளை மாநகர மேயர் ஜாலிய ஓப்பாத்த தெரிவித்தார்.
இதன்போது பாவனைக்கு உதவாத வெங்காயம், பருப்பு, கருவாடு மற்றும் சில உணவுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தம்புள்ளை பகுதியிலுள்ள களஞ்சியங்கள் சிலவற்றில் பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தம்புள்ளை மாநகர மேயர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பாவனைக்குதவதாக பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து அவர்களைக் கைது செய்யவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment
Leave A Reply