சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குடும்ப நடத்திய 21 வயது இளைஞன் ஒருவரை கொடிகாமம் பகுதியில் வைத்து கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவது:
ஆவரங்கால் பகுதியினைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி முச்சக்கரவண்டியில் பாடசாலைக்குச் சென்று வந்த நிலையில் குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியான இளைஞனும் சிறுமியும் காதல் வயப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (19) குறித்த சிறுமி தனது புத்தகப் பையினுள் உடைகளையும் எடுத்துக்கொண்டு முச்சக்கரவண்டி சாரதியுடன் சென்றுள்ளார்.
பாடசாலைக்கு சென்ற தமது மகளைக் காணவில்லையென சிறுமியின் பெற்றோர் திங்கட்கிழமை (19) மாலை அச்சுவேலிப் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சிறுமியினை மீட்டதுடன், குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்.
இதேவேளை மீட்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞனைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, May 21, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...

No comments:
Post a Comment
Leave A Reply