இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களின் பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்க எடுக்கப்பட்ட முடிவுக்கு, நரேந்திர மோடி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
வாழும் தனிநபர்களின் வாழ்க்கை பள்ளி பாடத்திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று தனது ருவிட்டர் கணக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளர்.
‘சில மாநிலங்களில் தங்கள் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நரேந்திர மோடியின் வாழ்க்கை போராட்டங்களை சேர்க்க வேண்டும் என்று அம்மாநிலங்கள் முடிவு செய்துள்ளதாக நான் செய்திகள் படித்தேன்.’
என்று தெரிவித்த மோடி,
‘இன்றைய இந்தியாவை உருவாக்கிய பல பெருந்தலைவர்களின் வளமான வரலாறு இந்தியாவுக்கு உண்டு. இளம் மனங்கள் அத்தகைய சிறந்தவர்களை பற்றி படித்து அவர்களை பின்பற்ற வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்க குஜராத் மாநில முதல்மைச்சர் ஆனந்திபென் படேல் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹன் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் மோடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பப் பள்ளிப் பாடத்திட்டங்களில் மோடி அவர்களின் வாழ்க்கையின் முக்கிய அத்தியாயங்களை சேர்க்கவுள்ளதாக குஜராத் மாநில அரசாங்கம் வியாழன் அன்று முடிவு செய்தது.
பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க மோடியின் வாழ்க்கை பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கலாம் என்று மத்திய பிரதேச மாநிலத்தின் அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
அவருடைய பிறப்பு, எளிமையான குடும்ப பின்னணி, பள்ளி நாட்கள், அவர் தனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் எவ்வாறு போராட்டங்களை எதிர்கொண்டார், எந்த சூழ்நிலையில் அவர் ஒரு துறவியாக முடிவெடுத்தார், பின் எவ்வாறு இந்திய பிரதமராக உயர்ந்தார் என்பது பற்றியெல்லாம் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்...
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply