ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.புதுடில்லியிலுள்ள ராஜ்ரபதிபவனில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் முக்கியத்தும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்காக நிர்மாணிக்கப்படுகின்ற இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டிற்குள் மேலும் 16,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்திய வீட்டுத் திட்டத்தை 2015ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்வதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய தேசிய ஒற்றுமைக்கான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த சந்திப்பில், இந்திய ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளுமாறு இந்தியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்ததாகவும், அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், நேபாள பிரதமர் சுஷ்மா கொயிராலவுடனான சந்திப்பொன்றிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply