blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, May 28, 2014

யுத்தத்தை முடிவுறச் செய்தமைக்கான நோக்கம் தொடர்பில் உலகிற்கு வியாபிக்கப்படவில்லை – இராணுவத் தளபதி


யுத்தத்தை முடிவுறச் செய்தமைக்கான நோக்கம் தொடர்பில் உலகிற்கு வியாபிக்கப்படவில்லை – இராணுவத் தளபதியுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்கான நோக்கம் மற்றும் அதனை செயற்படுத்திய விதம் என்பன உரிய வகையில் உலகிற்கு வியாபிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 இராணுவ சிப்பாய்கள் மற்றும் உயர் நிலை அதிகாரிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அடிப்படை ஊடகம் தொடர்பான கற்கை நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராணுவ தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில், இராணுவ தளபதி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
"யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான நோக்கம் மற்றும் அதனை செயற்படுத்திய விதம் என்பன உரிய வகையில் உலகிற்கு வியாபிக்கப்படவில்லை. உரிய வகையில் வெளிப்படவில்லை என்பதே உண்மை. அவ்வாறு சென்றிருந்தால் மேற்குலக நாடுகளால் இலங்கையை ஏனைய சர்வதேச நாடுகள் முன்னிலையில் இழிவுபடுத்த முயற்சித்திருக்க மாட்டார்கள். இவ்வாறான விடயங்கள் நிறுத்தப்படமாட்டாது. ஆகவே, சிறிய நாடு என்றாலும் அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டும்."

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►