ஐந்தாவது யுத்த வெற்றி விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நாளை மாத்தறை கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளன.
வெற்றிக் கொண்டாட்டங்களின் இறுதி ஒத்திகை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் நிறைவடைந்தன.
இறுதி ஒத்திகை நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆரம்பித்து வைத்தார்.
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக முப்படைகளையும் சேர்ந்த ஏழு ஆயிரம் உறுப்பினர்கள் அணிவகுப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதனிடையே
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு
சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யுத்த
வெற்றிக் கொண்டாட்டங்களை பார்வையிடுவதற்கு நாளை காலை ஆறு 30 க்கு முன்னர்
மாத்தறை சனத் ஜெயசூரிய விளையாட்டு அரங்கிற்கு வருகை தருமாறு பொலிஸ் ஊடகப்
பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply