கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவு என்ற வரையறையுடன் நில்லாது, அந்த உறவு தேசிய அளவுக்கு நகர்த்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அதற்கான பேச்சை எதிர்காலத்தில் முன்னெடுப்பது என்று தீர்மானித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உயர்மட்டச் சந்திப்பு நேற்று மாலை கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.
அந்தச் சந்திப்பின்போதே இரு தரப்புகளும், மேற்படி தீர் மானத்தை எடுத்துள்ளன.
அந்தச் சந்திப்பின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதி ராசா, எம்.ஏ.சுமந்திரன், ப.அரியநேந்திரன், பொன். செல்வராஜா மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அந்தக் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின் பிரதான இலக்கு கல்முனை நகரசபையில் நிலவும் உள்ளக முரண்பாடுகளைத் தீர்ப்பதாக இருந்தது. கல்முனை நகரசபையின் ஆளும்கட்சியான முஸ்லிம் காங்கிரஸால், அபிவிருத்தி நடவடிக்கையின்போது தமிழ் மக்கள் ஓரம்கட்டப்படுகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஆயினும் நேற்றைய கூட்டத்தின்போது, அவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறமாட்டாது என்று உறுதிவழங்கப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கும் அதேவேளை, அவ்வாறு ஓரங்கட்டும் நடவடிக்கை எவையும் நடைபெறவில்லை என்பது குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது என்று முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் காரைதீவுச் சந்தியிலுள்ள சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாசலுக்கான காணி குறித்த பிணக்கு நேற்றைய கலந்துரையாடலின்போது தீர்க்கப்பட்டுள்ளது என்று இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடையாக இருக்கின்றது என்று மக்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் நேற்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறு தாம் எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை என்று விளக்கமளித்துள்ளது. இது தொடர்பில் கொள்கையளவிலான இணக்கம் மாத்திரமே எட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுப்பது தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது இருதரப்பினரும் மீளவும் சந்தித்துக் கலந்துரையாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை, தனித்து கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் உறவு என்பதுடன் மாத்திரம் வரையறைப்படுத்தப்படாது, தேசிய ரீதியிலானா தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவது என்றும் இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, May 31, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
-
மன்னார், மருதனார்மடு பகுதியில் மிருகவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply