கிழக்கு
பல்கலைகழக வந்தாறுமூலை வளாகத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி
நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைகழக பேரவை தீர்மானித்துள்ளது.அதற்கமைய, வந்தாறுமுலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை நாளை மறுதினம் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக உப வேந்தர் கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.
இன்று காலை நடத்தப்பட்ட கிழக்கு பல்கலைகழக பேரவைக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைகழக விடுதிகளிலிருந்து வெளியேறியுள்ள அனைத்து மாணவர்களும் நாளை மாலை 05 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் பல்கலைகழக உப வேந்தர் தெரிவித்துள்ளார்.
வந்தாறுமூலை வளாகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலினை அடுத்து கடத்த மாதம் பல்கலைகழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply