blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, May 1, 2014

படித்தவைகளில் புதியவை

* நெப்டியூன் கோளில் நாம் ஓராண்டு வாழ முடிந்தால், பூமியில் 165 ஆண்டுகள் வாழ்வதற்குச் சமம்!

* நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தனது ‘ஸ்பேஸ் பூட்ஸ்’ காலணியை நிலவிலேயே விட்டு வந்து விட்டார்!
* முதல் மைக்ரோவேவ் அவன் சமையல் சாதனம் ரெஃப்ரிஜிரேட்டர் அளவு பெரிதாக இருந்தது.

* சில வகை சிலந்திகள் தங்கள் சொந்த வலையையே தின்று விடுகின்றன.

* டைனோசர்களுக்கு முன்பே இப்பூமியில் ஆமைகள் வாழ்ந்திருக்கின்றன.

* இங்கிலாந்தின் மக்கள்தொகையை விட, அமெரிக்காவில் டி.விக்களின் எண்ணிக்கை அதிகம்.

* இத்தாலியிலுள்ள ஒரு எரிமலை 2 ஆயிரம் ஆண்டுகளாக புகைந்துகொண்டே இருக்கிறது.

* நீங்கள் ஒரு மின்னலைப் பார்க்கும்போது, அது மணிக்கு 365 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

* 1415ம் ஆண்டிலேயே வாலன்டைன் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அவரே மூத்த வாலன்டைன்!

* கோலா விலங்குகள் ஒரு நாளில் 4 மணி நேரம் மட்டுமே விழித்திருக்கின்றன.

* சில பனிச்சறுக்கு வீரர்கள் மணிக்கு 161 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதுண்டு.

* ஒரே ஒரு ‘டீ பேக்’ விலை 12 ஆயிரம் அமெரிக்க டாலராம்... இதைத் தயாரித்த பிரிட்டிஷ் ஜுவல்லரி 280 வைரங்களால் அதை அலங்கரித்ததே இந்த விலைக்குக் காரணம்!

* நாம் சுமார் 10 ட்ரில்லியன் செல்களால் உருவாகியிருக்கிறோம்.

* ஒரு அமெரிக்கர் 30 நிமிடங்களில் 427 ஆம்லெட்கள் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார். நம்ம ஊர் ரோட்டோர புரோட்டா கடைகளில் சாதனை வேகம் எவ்வளவு?

* சராசரி குழந்தை வளரும் அதே வேகத்தில் தொடர்ந்து ஒருவர் வளர்ந்துகொண்டே இருந்தால், 10 வயதில் 1,87,469 கிலோ எடையை எட்டி விடுவார். நல்லவேளை!

* 2004ம் ஆண்டு வரை, சிங்கப்பூரில் ‘சூயிங் கம்’ தடை செய்யப்பட்டிருந்தது.

* பனிச்சிறுத்தைகளால் கர்ஜனை செய்யவோ, பேரொலி எழுப்பவோ முடியாது.

* வட அமெரிக்காவின் மிக வெப்பமான பகுதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. அவ்விடத்துக்கு மரணப் பள்ளத்தாக்கு எனும் பொருள்படும் ‘டெத் வேலி’ என்ற பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

* பெண் தேனீக்கள் மட்டுமே கொட்டும்.

* சில வகை வண்ணத்துப்பூச்சிகளின் கண்கள் அதன் இறக்கைகளில் உள்ளன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►