தனக்கும் பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொது பலசேனா அமைப்பின் ஒருங்கினைப்பாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு அங்கத்தவரான திலன்த விதானகே அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பொது பலசேனா அரசாங்கத்திற்கு எதிராக வேறு கட்சிகளுடன் இரகசியமாக செயற்பட்டு வருவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.
அரச அமைச்சர்கள் மற்றும் தனி நபர்களினால் தமது அமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் காரயமாக தமக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமது உயிரிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என திலன்த விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply