அரலகங்வில மற்றும் கதிர்காமம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன
விபத்துக்களுக்கு சாரதிகளின் கவனயீனமே காரணம் என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
அரலகங்வில அளுத் ஒயா பகுதியிலுள்ள இசெட் டி
வாய்க்காலுக்குள் சிறிய ரக உழவு இயந்திரமொன்று நேற்று விழுந்து
விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
அளவிற்கு
அதிகமானவர்களை உழவு இயந்திரத்தில் ஏற்றி அதனை வேகமாக செலுத்துவதற்கு சாரதி
முனைந்தமையே விபத்துக்கான முக்கிய காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
தெரிவித்துள்ளார்
இந்த விபத்து இடம்பெற்று 24 மணித்தியாலங்கள்
கடப்பதற்கு முன்பதாகவே கதிர்காமம் தெட்டகமுவ வாவிக்குள் இன்று அதிகாலை வேன்
ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சிறுவன் ஒருவன் மாத்திரம் உயிரிர்த்தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேனின்
சாரதி நித்திரை கிரக்கத்துடன் இருந்தமையே விபத்துக்கு காரணம் என பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply