சிகிரியா கலாபுர பகுதியில் சட்டவிரோதமாக 14 கடற்பறவை கூடுகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிகிரியா சரணாலயத்தில் சந்தேகநபர் இந்த கூடுகளை உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விற்பனை செய்யப்படவிருந்தபோது கைப்பற்றப்பட்ட கடற்பறவை கூடுகளின் பெறுமதி ஐந்து இலட்சம் ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று தம்புளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
கடற்பறவை கூடுகள் வெளிநாடுகளில் பல்வேறு உணவு வகைகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply