நோயாளர்களை தனியார் முகவர்களிடம் கண்வில்லைகளை பெறுமாறு
வைத்தியர்கள் அறிவுறுத்தல் வழங்கும் சம்பவங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்ணில் வௌ்ளை படர்தல் நோய்க்கான கண்வில்லைகளை சுகாதார அமைச்சு அரச வைத்தியசாலைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.
எனினும் அரச வைத்தியசாலைகளிலுள்ள வைத்தியர்கள் நோயாளர்களை தனியார் முகவர்களிடம் கல்வில்லைகளை பெறுமாறு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
20,000 ரூபா பெறுமதியான குறித்த கண்வில்லைகளை பணம் கொடுத்து பெற முடியாத நோயாளர்கள் பெரும் சிரமத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
நோயாளர்களினால் பணம் கொடுத்து தனியார் முகவர்களிடம் கண்வில்லை பெறும்போது வைத்தியர்களுக்கு ஒரு தொகை பணம் வழங்கப்படுவதாக அத தெரணவிற்கு தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply