நேற்று இரவு நடைபெற்ற 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.இந்திய அணி எப்படியும் 150 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், யுவராஜ்சிங் உள்ளே நுழைந்த பிறகு அவர் சொதப்பியது மட்டுமின்றி, இந்திய அணியின் ரன் வேகத்தையும் குறைத்து விட்டார். இதனால் இந்தியா 130 ரன்னுக்குள் அடங்கி போய் விட்டது. இதனால் ரசிகர்கள் யுவராஜ் சிங்கை குறை கூற ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், போட்டி முடிந்த சிறிது நேரத்தில் சண்டீகரில் உள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது ரசிகர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, யுவராஜ்சிங்கிற்கு ஆதரவான கருத்து தெரிவித்த அவரது தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங், தோல்விக்கு யுவராஜ் சிங் மட்டும் காரணம் அல்ல என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply