blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, April 7, 2014

மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி ஒலி வந்த இடத்துக்கு 2 அதிநவீன கப்பல்கள் விரைகின்றன


மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி ஒலி வந்த இடத்துக்கு 2 அதிநவீன கப்பல்கள் விரைகின்றன.
மாயமான மலேசிய விமானம்
மாயமான ‘மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச் 370’ விமானத்தின் கதி, ஒரு மாதமாகியும் இன்னும் உறுதிபடத் தெரியவில்லை. இந்த விமானத்தில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உள்பட 239 பேரது குடும்பங்களும், தங்கள் குடும்ப உறுப்பினரின் கதி தெரியாமல் கலங்கிப்போய் உள்ளனர்.அந்த விமானம் கடந்த 8–ந் தேதி அதிகாலை 2.40 மணிக்கு நடுவானில் மாயமானபோது நடந்தது என்ன, விமானி அறையில் என்ன பேசப்பட்டது என்பதையெல்லாம் ஒலிப்பதிவு செய்துள்ள விமானத்தின் கறுப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. அதில் உள்ள பேட்டரி ஒரு மாத காலமே இயங்கும் என்பதால் அதன் ஆயுட்காலம் இன்று அல்லது நாளை முடிந்துவிடக்கூடும்.
தேடுதல் வேட்டை
எனவே அந்த கறுப்பு பெட்டியை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் ‘டோவ்டு பிங்கர் லொக்கேட்டர்’ என்னும் கருவிகளுடன் ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ’ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் ஈடுபட்டுள்ளன.இந்த நிலையில், அந்த விமானத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சீனகப்பல் ‘ஹாய்ஸன் 01’, இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் இருந்து மாயமான விமானத்தினுடையது என கருதப்படுகிற கறுப்பு பெட்டி சிக்னலை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு முறையும், சனிக்கிழமை ஒரு முறையும் அந்த சிக்னலை (ஒலி சமிக்ஞை) கேட்டுள்ளன.
2 விமானங்கள் விரைவு
இந்த நிலையில் கடலின் அடிமட்டத்தில் விமானத்தின் கறுப்பு பெட்டி கிடந்தாலும் அதைக் கண்டுபிடிக்க ஏற்ற அதிநவீன கருவிகளுடன் இரண்டு போர்க்கப்பல்கள், சிக்னல் வந்த கடல் பகுதிக்கு விரைந்து கொண்டிருக்கின்றன.இது குறித்து விமானத்தை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவுக்கு தலைமை தாங்குகிற ஆங்கஸ் ஹூஸ்டன், பெர்த் நகரில் நேற்று கூறியதாவது:–
தற்போது கிடைத்திருப்பது மிக முக்கியமான தகவல் ஆகும். மாயமான விமானத்தை இந்திய பெருங்கடலில் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிநவீன கேட்கும் கருவியுடன் கூடிய ஆஸ்திரேலிய கப்பல் ஓஸன் ஷீல்டு, இன்று (அதாவது, நேற்று) கடலின் வேறொரு பகுதியில் ஒரு விசித்திரமான ஒலியைக் கேட்டுள்ளது. ஆனாலும் அந்த ஒலி, மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்துதான் வந்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை.
நம்பகமான தகவல்
கடலுக்கு அடியில் நீண்ட தொலைவுக்கு பயணிக்கிற ஆற்றல் ஒலிக்கு உண்டு.மிகப்பெரிய கடலில், மிகப்பெரிய பிரதேசத்தில் நாங்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதுவரை ஒரு சில நம்பகமான தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் எங்களது பணி தொடர்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘மனித வரலாற்றில், மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி, மிகக்கடினமான ஒன்றாக அமைந்துள்ளது. கடலுக்கு மிக அடியில் போய் விட்ட ஒரு கப்பலை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். மிகப்பெரிய பரப்பில் தேடுகிறோம்’’ என கூறினார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►