blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 19, 2014

ரத்த சோகை இருந்தால் ரத்த தானம் செய்யலாமா?


குறிப்பிட்ட இடைவெளிகளில் ரத்த தானம் செய்து வருகிறேன். சமீபத்தில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்தபோது ரத்தசோகையாக இருப்பது தெரிய  வந்தது. நான் ரத்த தானத்தைத் தொடரலாமா? 

விளக்கமளிக்கின்றார் பொது மருத்துவர் சுந்தர்ராமன்  (இந்தியா)

ஒருவர், 120 நாட்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். இடைப்பட்ட நாட்களில் உடலில் புதிய ரத்தம் உற்பத்தி ஆகிவிடும். பொதுவாக  ஆரோக்கியமான ஒருவரின் உடலில் 10 கிராம் ஹீமோ குளோபின் இருக்க வேண்டும். பெண்களுக்கு 12 கிராம் இருக்க வேண்டியது கட்டாயம்.  மருத்துவ மனைகளில் உரிய சோதனைகளுக்குப் பிறகுதான் ரத்தம் எடுப்பார்கள்.

ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் ரத்தம் எடுக்க மாட்டார்கள். உங்கள் ஹீமோகுளோபின் அளவை அவ்வப்போது பரிசோதனை செய்துவிட்டு,  அதற்குப் பிறகு ரத்தம் கொடுப்பது நல்லது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கத் தேவையான மருந்துகளும் மாத்திரைகளும் நிறையக்  கிடைக்கின்றன. அதனால் நீங்கள் மருத்துவர் ஆலோசனையுடன் ரத்தசோகை பிரச்னையில் இருந்து விரைவிலேயே குணமாகி விடலாம்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►