வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படுகின்றன.ஆப்கானிய தேர்தலின் ஆரம்பக் கட்ட
முடிவுகளின்படி முன்னாள் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலை வகிப்பதாக அந்த நாட்டின் சுயாதீன தேர்தல்
ஆணையம் கூறியுள்ளது.
மொத்தமுள்ள 30 மாகாணங்களில் 26 இல், இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், அப்துல்லாஹ் அவர்கள் 41.9 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவரது நெருக்கமான போட்டியாளராகத் திகழும் கல்விமானான அஷ்ரப் ஹானி அவர்கள் 37.6 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் வாக்குகள் எண்ணப்படுமிடத்து இந்த நிலைமை மாறக்கூடும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply