குரங்கு குட்டியை அநாதையாக்கிவிட்டோம் என்ற மன உழைச்சலில் சிங்கமொன்று குரங்கு குட்டியொன்றை அன்பாக பராமறித்து வருகின்ற காட்சி பலரது கவனத்தை ஈர்த்தள்ளது.
வாலற்ற குரங்கொன்று புதிதாக பிறந்த தனது குட்டியை மடியில் சுமந்து வருவதை அறியாத சிங்கம் அதனை வேட்டையாடியுள்ளது.
பின்னர் தாய் குரங்கை கொன்றுவிட்டோம் என்ற மன உழைச்சலில் திரிந்துள்ளது. இதன்போது அநாதையான குரங்கு குட்டியை காட்டில் உள்ள விலங்குகள் வேட்டையாட முயன்றுள்ளன. இதனையறிந்த அந்த சிங்கம் குரங்கு குட்டியை தனது பாதுகாப்பில் வளர்க்க தொடங்கிவிட்டது.
குரங்கு குட்டியை நோக்கி ஏனைய மிருகங்கள் வரும்போது அவற்றை துரத்திவிட்டு குட்டியை மரத்தில் ஏற்றிவிடுவதும் பின்னர் அதனுடன் விழையாடுவதும் அதனை அரவனைப்பதுமென அக்குட்டியை அன்பாக சிங்கம் பராமறித்து வருகின்றது.
இக்காட்சியை (கொல்ப்) வீரரான இவன் ஸ்கிலர் என்பவர் படம்பிடித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தென் ஆபிரிக்கா, பொட்ஸ்;வானா பகுதிக்கு சுற்றுலாவிற்காக சென்ற போது அங்குள்ள சிங்கங்களுக்கான விளையாட்டு பூங்காவில் இக்காட்சிகளை படம்பிடித்துள்ளனர்.
இவர்கள் இம்முகாமிற்கு சென்ற அனுபவங்களை உள்ளடக்கிய கதையில் சிங்கத்தின் கதையை சிறப்பாக எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply